`சந்திக்க மறுத்து அடம்பிடிக்கும்` தமிழ் தேசிய கூட்டமைப்பு

May 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் இன்று (மே. 5) மாலை சந்தித்து வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளை நடத்தவிருக்கின்றன. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் உடனடி நிவாரணம்  மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவங்கள் சில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்று கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் கலந்துகொண்டன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிட்னியில் உண்ணா விரதம் இருந்த மூவர் கைது; ரொறன்டோ `அடங்காப்பற்று` கைவிடப்பட்டது

May 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

அவுஸ்ரேலியாவில் சிட்னி – பரமற்ர பகுதியில் கடந்த இரு தினங்களாக சாகும் வரை உண்ணா விதரம் இருந்து வந்த வேந்தன், தீபன் மற்றும் சுதா என்பவர்கள் சிட்னி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்படி கைது செய்யப்பட்ட மூவரும் உடனடி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பரமற்ர பகுதியில் உள்ள பொது மருத்துவ மனைக்கு சிட்னி பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தயா மாஸ்ரர் நியமன நாடாளுமன்ற உறுப்பினராகிறார்?

May 4th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தயா மாஸ்ரரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக்குவதன் மூலம் தொடர்ந்து போர் புரியும் புலிகள் தரப்பில் உள்ளவர்களுக்கு படையினரிடம் சரணடையும் வழிவகைகளை மேலும் நம்பிக்கை ஊட்டலாமென அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு தயா மாஸ்ரர் நியமன நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்து தனது இடத்தை தர வேண்டியிருக்கும்.

AddThis Social Bookmark Button

23 வது ஆண்டு நினைவேந்தும் சுவரொட்டிகள்

May 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

எம் இனத்திற் குள்ளேயே இருந்த புல்லுருவிகள் பாசிசப் புலிகளின் சகோதரப் படுகொலையால் உயிர்நீத்த எமது தலைவர் சிறீ சபாரத்தினமும் அவரோடு சேர்த்து புலிகளால் குதறப்பட்ட உறுப்பினர்களினதும் 23ம் ஆண்டு பிரார்த்த தினத்தை நினைவு கூறும் நாம், புலித் தலைமையின் சர்வாதிகாரப் போக்கினால் எம் இனத்தின் வாழ்வியலே திசைமாறிப் போய், அகதிகளாய் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்ற அப்பாவி மக்களின் இருப்பையும் நிம்மதியும், சுதந்திரமானதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க எமது தலைவர் சிறீ அண்ணா வழியினிலே தோளோடு தோள் நிற்போம்.

“ கருத்து முரண்பாட்டிற்கு  சரீர ஒழிப்பு சிறந்ததல்ல ”
               – தலைவர் சிறீ சபாரத்தினம்

(23 வது ஆண்டு நினைவேந்தும் சுவரொட்டிகள் தாயகத்தில் பல இடங்களில் காணக்கூடிய இருந்தது. அந்த சுவரொட்டியில் மேலுள்ள வாசகங்கள் காணப்படுகின்றது) 

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

May 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளு மன்ற உறுப்பினர்கள் உட்பட மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரும் செவ்வாய் கிழமை (மே. 5) ஜனாதிபதியுடன் சந்திக்க உள்ளனர். அச்சந்திப்பில் வன்னியில் இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக பேசவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரெலோ நீயூஸ்க்கு தெரிவித்தார்.

AddThis Social Bookmark Button

‘மாத்தையா`வின் மனைவி பிள்ளைகள் இராணுவத்திடம் சரண்

May 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலச்சாமி மகேந்திரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நேற்று (மே. 1) இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளதாக கொழும்பு இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான `ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வு துறைக்கு புலிகளின் தலைமை குறித்த தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது குற்றஞ் சாட்டிய புலிகள் 1994 டிசம்பர் 25 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘புளொட்’ அமைப்பின் இராணுவப் பொறுப்பாளர் மாவட்டப் பொறுப்பாளர் உட்பட 18 பேர் வவுனியாவில் பொலிஸாரால் கைது

May 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியாவில் நேற்று (மே. 1) இரவு தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) இராணுவப் பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளார் உட்பட 18 பேர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நெடுமாறன், சூரி, சிவா, மோகன் என பல முக்கிய புளொட்டின் உறுப்பினர்கள் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஒரு தேசிய தமிழ் பத்திரிகையின் வவுனியா நிருபர் தெரிவித்தார். மே தினமாக நேற்று இரவு கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்துகொள்கிறார்

May 2nd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  இன்று சனிக்கிழமை 02.05.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, http://www.trttamilalai.com/ என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

ஆயுதக் கலாச்சாரத்தின் ஐரோப்பிய வருகை

May 1st, 2009 admin Posted in TELOnews No Comments »

அநாமதேய அரசில் கொலைகளின் வரலாறு எமது தேசத்தையும் தாண்டி பாரிஸிலும் தனது கோரமாக பதித்துள்ளது. பாரிஸில் சபாலிங்கத்தின் படுகொலையால் மானிடம் மீண்டும் ஒரு முறை தலைகுனிந்தது. மே மாதம் முதலாம் திகதி (1/5/1994) பிற்பகல் 1 மணியளவில் துப்பாக்கி சகிதம் அவரது வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இனம் தெரியாத தமிழ் இளைஞர்கள் அவரது மனைவி, குழந்தை முன்னால் சபாலிங்கம் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்த பின் தொலைபேசி மற்றும் சகல தொடர்புகளையும் நாசஞ் செய்து குடும்பத்தினரையும் எச்சரித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவரது மனைவியும் மகனும் இக்கோரக் கொலையை நேரில் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

லண்டனில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

April 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரித்தானியாவில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கடந்த 23 நாட்களாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனை இன்று (ஏப். 30) லண்டன் காவற்துறையுடன் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. அவரது தொடர் உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதாக தெரிவித்த அந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தாம் தொடர்ந்து சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சுழற்சி முறை உண்ணாவிரதத்தை மேற்கொள்ள ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

’பீப்பிள்ஸ் எய்ட்’ நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளுக்கு வீசா ரத்து

April 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

நோர்வேயை பின் தளமாகக் கொண்ட ’பீப்பிள்ஸ் எய்ட்’ நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் நேற்று (ஏப். 29) உத்தர விட்டுள்ளது. சமாதான பேச்சு காலகட்டத்தில் வபுலிகளுக்கு 36 வாகனங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இவர்களின் வீசா அனுமதிகள் நேற்று ரத்துச் செய்யப்பட்டன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் குரல் வெளியிட்ட புகைப்படம்

April 29th, 2009 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

24 மணித்தியாளத்தில் புலிகளின் 7 தற்கொலை தாக்குதல்கள் முறியடிப்பு

April 29th, 2009 admin Posted in TELOnews No Comments »

பாதுகாப்பு வலய பிரதேசத்தில் உள்ள வலைஞர் மடம் பகுதியில் கடந்த 24 மணித்தியலத்தில் புலிகள் 7 தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய (ஏப். 28) தினம் வெடிபொருள் நிரப்பப்பட்ட லொறியை பாவித்தும் இன்றைய தினம் மூன்று மோட்டார் சைக்கிள்களைப் உபயோகித்தும் மற்றும் மனித தற்கொலைத் தாரிகளைப் பாவித்தும் வெள்ளா முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறிவரும் படையினரை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட 7 தாக்குதல்களும் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

AddThis Social Bookmark Button

முல்லைக் கடலில் மோதல்; 25 கடற்புலிகள் மரணம்; 4 தற்கொலைப் படகுகள் அழிப்பு

April 29th, 2009 admin Posted in TELOnews No Comments »

 முல்லைத்தீவை அண்டிய கடற்பரப்பில் இன்று (ஏப்.29) காலை கடற் புலிகளுக்கும் இலங்கை கடற் படைக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மோதல்களின் போது இலங்கை கடற்படையினர் புலிகளின் 4 தற்கொலைப் படகுகள் உட்பட 6 படகுகளை தாக்கி அழித்ததாகவும் அதில் 25க்கு அதிகமான கடற்புலிகள் இறந்துள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

கனடாவில் `சிவம் அண்ணா` காலமானார்

April 29th, 2009 admin Posted in TELOnews No Comments »

எழுபதுகளில் இலங்கையின் வடபுலத்தில் ஆளுமை செலுத்திய மாவோயிஸ்ட்கள் மத்தியில் குறிப்பிடக்கூடிய களப்பணியாளர்களில் ஒருவரான சிவம் அண்ணா கனடாவில் 2009 ஏப்ரல், 27 அதிகாலை மாரடைப்பால் மரணமானார். சாதிய ஒடுக்கு முறையின் கொடுமுடி என்றழைக்கப்படும் வடமராச்சியில் கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அண்ணா சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முதன்மை போராளியாக இருந்து உழைத்தவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button