சிறீதரன் கள்ளவாக்குகள் போட்டமை ஒரு அருவெறுக்கத்தக்க செயல்:சந்திரசேகரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பல கள்ளவாக்குகள் போட்டமை ஒரு அருவெறுக்கத்தக்க செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மன்றத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

சிவஞானம் சிறீதரன் அளித்த பேட்டியில், தான் ஒரு காலத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கச் சென்றிருந்து குரல் கொடுத்தார்களா என்பது கேள்விக்குறியான விடயம்.

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஓரளவேனும் தீர்த்திருக்கலாம். சிறீதரன் தனது வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், தனது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அவ்வாறு பேசுகிறார்.

சிறீதரன் இவ்வாறான சித்து விளையாட்டுக்கள் மூலம் பல வாக்குகளை கள்ளத்தனமாக அளித்தார் என்றால், அது அரசியல்வாதியின் பொருத்தப்பாடான செயற்பாடாக அமையாது.

ஐக்கிய தேசிய கட்சியின் வாசனையைக் கொண்டவர்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

மக்கள் விடுதலை முன்னணியைப் பொறுத்தவரையில் சிறீதரனின் செயற்பாடு ஒரு அருவெறுக்கத்தக்க செயற்பாடு என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply