நாடாளுமன்ற வேட்பாளர் சிவாஜிலிங்கம் திடீர் கைது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் அது தொடர்பான முழுமையான விபரத்தை வெளியிட மறுக்கின்றனர்.

இது தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் காலை தனது வீட்டிற்கு வந்த பொரிஸார் காரணமின்றி தன்னை கைது செய்துள்ளதாகவும், இன்றைய தினம் கரும்புலி தினம் என்பதாலேயே தன்னைக் கைது செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கரும்புலி தினத்திற்குரிய ஏற்பாடுகளை தான் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனினும் வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply