கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் நான்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதாக சிலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

வைரசுக்கு வாசனை இல்லை என்றாலும், அது உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தால் மக்களின் வியர்வையில் வித்தியாசமாக வாசனை ஏற்படுகிறது என்று இத்திட்டத்தின் கால்நடை தொற்றுநோயியல் பேராசிரியர் பெர்னாண்டோ மார்டோன்ஸ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அதன்பின்னரே ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரோந்து செல்ல அழைத்துச் செல்லப்படும் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply