வேறு ஒரு பெண்ணின் கணவரை தன் கவணவர் என கூறி கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து வந்த பெண் போலீஸ்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு போலீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து போலீசாரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சில போலீசார் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அப்படி தனிமைப்படுத்தப்படும்போது அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காண்ஸ்டபில் தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த பெண் காண்ஸ்டபில் கொடுத்த தகவலின் அடிப்படையில் தபால் துறையின் வேலை செய்து வந்த நபரை தொடர்பு கொண்டு அதே கொரோனா தடுப்பு முகாமில் பெண் காண்ஸ்டபில் உடன் தனிமைப்படுத்தினர்.
இதற்கிடையில், பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் தனது கணவருக்கு கொரோனா உள்ளது என கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால், அவர் பெண் காண்ஸ்டபில் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை மீட்டுத்தரவேண்டும் எனவும் புகார் மனு கொண்டுத்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் காண்ஸ்டபிலுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும், காண்ஸ்டபிலுடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஆண்டு நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியின் போது பெண் காண்ஸ்டபிலும் அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த அந்த ஆண் நபரும் சந்தித்துள்ளது. அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
தனது கணவர் பெண் காண்ஸ்டபிலுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தது அந்த நபரின் மனைவிக்கு தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.
இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தையடுத்து பெண் காண்ஸ்டபிலும், அவரது ரகசிய காதலனும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply