புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பேசிய சஜித் : ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம்
மீண்டும் இலங்கையை நோக்கி வந்தடைய முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குறிப்பிடுகையில் நேற்றையதினம் (24) பாராளுமன்றத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை எழுந்தது.
நேற்றையதினத்திற்கான பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் நிறைவடைவதற்காக 15 வினாடிகள் எஞ்சியிருந்த நிலையில் அந்த நேரத்தில் 5 வினாடிகளை பெற்று இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சனைகள் குறித்து பாராளுமன்ற கவனத்தை செலுத்த சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் அனுமதி பெற்றிருந்த நிலையில், அதன்படி நாட்டை வந்தடைய எதிர்பார்த்துள்ள சுமார் 40000 தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்.
இதன்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ “இது நிகழ்ச்சி நிரலில் இல்லாததால் இதை அனுமதிக்க முடியாது, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் யாரும் இல்லை” என குறிப்பிட்டார். இருப்பினும் இதை அவசர கேள்வியாக கருதி கருத்து தெரிவிக்க இடமளிக்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள்விடுத்த போதிலும் ஜோன்ஸ்டன் தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது இறுதியில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், இந்தக் கதை மட்டுமே ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டால் அரசாங்கத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply