கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் சென்று சிகிச்சைபப் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் மாத்திரமே இந்த காய்ச்சல் காணப்படும் என்றும் அதற்கு மேல் காணப்பட்டால் சிகிச்சைப் பெறுவது சிறந்தது எனவும் அவர் கூறினார்.

மேலும் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எவ்வித தடைகளுமின்றி கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகளின் முதல் தொகுதி எதிர்வரும் சில நாட்களுக்குள் கிடைக்கவிருப்பதாகவும், அவை கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply