சம்பந்தனின் அறிக்கையை ரெலோ நிராகரித்தது

பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும் என ரெலோ தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணையை நிறைவேற்றும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, ரெலொ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும் முகமாக இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பாக தமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதாக ரெலோ தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையில் கூட்டமைப்பாக ரெலோ தலைவரின் பெயரும் இணைக்கப்பட்டருந்த போதும், தமது பரிசீலனைக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாதமை வருத்தத்துக்குரியது எனவும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply