தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாது:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன்வர வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply