ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து
இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.இன்று உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் அன்பும் இரக்கமும் கொண்ட ஒரு மனிதாபிமான சமூகத்தில் வாழவும் இந்த உயிர்த்த ஞாயிறு நாளில் நாம் உறுதிகொள்வோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாத தாக்குதலுக்கு கிறிஸ்தவ மக்கள் உள்ளாகினர். அத்தகைய கொடூர சம்பவத்தை புரிந்த குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.
மீண்டும் இத்தகையதொரு அனர்த்தம் நிகழாத வகையில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை இயேசுநாதர் போதித்த மனித விடுதலை குறித்த செய்தி, சமூகத்திற்கு முக்கியமானதொரு அடித்தளமாக திகழ்கின்றது” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply