1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி என்று இராஜாங்க அமைச்சர ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சம்பள நிர்ணய சபையின் 1000 ரூபா கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக எதிரணி தரப்பு தாக்கல் செய்திருந்த மனு நேற்று உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு எதிரான மனு மீதான முதற்கட்ட விசாரணையை அடுத்து கம்பனி தரப்பு கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் இம்மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.
இதன் காரணமாக வர்த்தமானி அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளவாறு பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெறக்கூடியவர்களாக உள்ளனர். ஏற்கனவே நுவரெலியா அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீ பாலடி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரிற்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்விடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply