மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்களுக்கு முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் எளிய முறையில் விழா நடைபெறுகிறது. முதல்வர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply