தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்

கொரோனா பரவல் காரணமாக சென்னை கிண்டி ராஜ்பவனில் இதற்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்..’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி பிரமாணம் ஏற்று வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply