எம்.எல்.ஏவாக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். முதல்வர் பதவியேற்பைப் போன்றே ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனக்கூறி எம்.எல்.ஏவாக பதவியேற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

மு.க ஸ்டாலினைத் தொடர்ந்து அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகனும் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply