யாழ் இந்து விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது

யாழ். இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதானம் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 55 மில்லியன் ரூபா செலவில் புனரமைத்து இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதான நுழைவாயில், நினைவுக் கல், டிஜிட்டல் புள்ளி விபரப் பலகை என்பனவும் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வரயக் கல்விப் பணிப்பாளர் இராதாகிருஸ்ணன், செய்சோற்செல்வன் ஆர்.திருமுருகன் நிதி வழங்குநர்களான லண்டன் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளான பிரபாகரன், கரிகரன், சந்திரப்பிரகாஸ்உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply