பிரித்தானியத் தூதுவர் கூட்டமைப்பு திடீர் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய தூதர் சேரா ஹல்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரே சந்தித்தனர்.
இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது. இதேநேரம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன் தலைமையிலான ஓர் அணி எதிர் வரும் 15ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply