யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்கள் மீள் குடியமர்வு
வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களின் விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் யாழ் செயலகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், முகாம்களில் தங்கியிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் யாழ் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றன. இந்த மக்களை, அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கான முன்னேற்பாடாகவே விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததுடன், இதனையடுத்தே, இவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராமாவில் முகாமில் தங்கியிருக்கும் மக்களின் விபரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருப்பதுடன், இந்த மக்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்படலாமெனவும் குறிப்பிடப்படுகிறது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் 3 இலட்சம் மக்களில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக்கொண்ட 6 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மக்களும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply