எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட டலஸ் முடிவு

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தானும் களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை டலஸ் அழகப்பெருமவை கொண்டு வருவதில் முனைப்பு காட்டினாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் புதிய ஜனாதிபதியை தெரிவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சஜித் பிரேமதாச முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply