யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்திரிக்காவை கைது செய்ய சர்வதேச மனித உரிமைகள் பேரவை திட்டம்

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கைது செய்ய சர்வதேச மனித உரிமைகள் பேரவை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு ஒன்றில் வைத்து சந்திரிகாவை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சியிலிருக்கும் நாட்டுத் தலைவர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தினால் சந்திரிகாவை கைது செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் 231 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.  ஆட்சியிலிருக்கும் நாட்டுத் தலைவர் ஒருவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையைத் தவிர வேறு எந்த அமைப்பினாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென சுட்டிக்காட்டப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply