கண்ணிவெடி அகற்றும் பணிக்கு ஐ.நா. உதவி
வடபகுதியில் கண்ணிவெடி அப்புறப்படுத்தும் பணிகளுக்கு 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் எந்தோனியோ கெட்டஸ்டன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போதே மிதிவெடி அகற்றும் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது. ஜெனீவாவில் நடைபெறும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் நிறை வேற்றுக்குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply