பாகிஸ்த‌ானில் தற்கொலைப்படை தாக்குதல் : 40 பேர் பலி ; 100 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவரில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கைபர் பஜார் பகுதியில் மினிபஸ் முழுவதும் வெடிப்பொருட்களுடன் வந்த பயங்கரவாதிகள் அதை மோதச்செய்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். அண்‌மையில் ஐ.நா. சபை அலுவலகம் முன் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பலம் நிறைந்த ஐ.நா. சபை அலுவலகத்துக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பை போல  வடமேற்கு மாகாண சட்டசபை அருகே இன்றைய குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெ‌டிப்பு நடந்த போது சட்டசபையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply