அமெரிக்க செனெட்டில் அன்டனி பிளிங்கென் உரையாற்றிக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டம்

அமெரிக்க செனெட்டில் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உரையாற்றிக்கொண்டிருந்தவேளை காசாவில் யுத்தநிறுத்தத்தை கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் உரைக்கு குழப்பம் விளைவித்தனர்.

அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு செயலாளர்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான நிதி குறித்து செனெட்டில் விளக்கமளித்தனர்.

இஸ்ரேலின் ஹமாசிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு 14. 3 பில்லியன் டொலர்கள் அவசியம் என அவர்கள் தெரிவித்தனர்.

அன்டனி பிளிங்கென் தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக காத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டனர்.

இதன் காரணமாக அன்டனி பிளிங்கென் தனது வாக்குமூலத்தை இடைநிறுத்தினார் அமர்வை பல தடவைகள் இடைநிறுத்தவேண்டிய நிலைக்கு செனெட் தள்ளப்பட்டது.

பின்னர் நாடாளுமன்ற பொலிஸார் அவர்களை அழைத்துச்சென்றனர்.

டேர்க்சென் செனெட் அலுவலக கட்டிடத்திற்குள் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுத்தத்திற்கு எதிரான கொடெபிங் என்ற அமைப்பின் ஆர்ப்பாட்டக்காரர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பு உக்ரைனிற்கு ஆயுதங்களை அனுப்புவதை எதிர்த்து வருகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காசா முற்றுகைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply