ஜபாலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் பெண்களும் சிறுவர்களும் பெருமளவில் பலி மருத்துவர்
ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அதிகளவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
120 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இந்தோனேசிய மருத்துவமனையின் சத்திரகிசிச்சை இயக்குநர் முகமட் எல் ரொன் தெரிவித்துள்ளார்.
பெண்களும் குழந்தைகளுமே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் காயமடைந்த பெருமளவானவர்கள் சிகிச்சை பெறுவதை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுள்ளார்.
கடும் காயமடைந்தவர்களிற்கு மேலதிக சத்திரகிசிச்சையை வழங்கவேண்டியிருந்ததால் தாக்குதல்களிற்கு மத்தியில் காசாவின் அன்ஸிபா மருத்துவமனைக்கு அனுப்பவேண்டிய நிலையேற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply