ஐ.தே. கூட்டமைப்பு நீண்டநாள் நிலைக்காது: ஊடகத் துறை அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக அமைத்துள்ள கூட்டணியை ஒரு கூட்டணி என்றே கூற முடியாது என்றும் அது நீண்டநாள் நீடிக்காது என்றும் தகவல் ஊடகத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு அரசியல் கூட்டணி என்றால் அதில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்க வேண்டும். எனினும் ஐ.தே. கூட்டமைப்பில் அவ்வாறான ஒரு நிலை இல்லை. அதில் அங்கம் வகிக்கும் மனோ கணேஷன் யானைச் சிண்ணத்தில் போட்டியிட்டவர். அதேபோன்று ரவூப் ஹகீமும் யானைச் சிண்ணத்தில் போட்டியிட்டவர். அவ்வாறாயின் இவர்கள் அனைவுரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களே.

மற்றைய கட்சிகளைப் பார்த்தால் அதுவும் தனித்தனி நபர்களின் கட்சிகளாகவே தெண்படுகின்றன. எங்களுடைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இடம்பெறுகின்றன. அவையனைத்தும் போலியல்லாத அரசியல் கட்சிகளாகும்.

கூட்டமைப்பு என்கின்ற முறையில் எம்முடன் இணைந்துள்ள கட்சிகளின் எண்ணிக்கையைப்  பார்க்கும் போது அவர்களின் கூட்டமைப்பை என்னவென்று அழைப்பது என அமைச்சர் மேலும் கேள்வி எழுப்பினார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply