பிரபாகரனின் தந்தையின் ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து: ஓய்வூதிய ஆணையாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலுப்பிள்ளையை படையினர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதனால், அவரது முகவரி குறித்த பிரச்சினை காரணமாக தற்காலிகமாக ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய ஆணையாளர் கே.ஏ. திலகரட்ன தெரிவித்துள்ளார்.

1924ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை, 1943 பெப்ரவரி மாதம் 01 ம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் முதலாவதாக சேவையில் இணைந்து கொண்டுள்ளார். பிரபாகரனின் தந்தை இராணுவத்தினரால் கண்டு பிடிக்கப்படும் வரையில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திணைக்களத்திலிருந்து 16865 ரூபா ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

வேலுப்பிள்ளையிடம் விசாரணைகள் பூர்த்தியடைந்ததன் பின்னர் நிரந்தர முகவரி அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply