வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காலி, இமதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கும்புர பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. காலி, திக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply