புத்தளத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தரணகஹவெவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (18) இரவு மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம , இஹலகுருகெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி, பாதுகாப்பற்ற முறையில் மின் கேபிள் ஒன்றிலிருந்து மின்சாரத்தை பெற்று கிரைண்டர் ஒன்றை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply