கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது

சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு கேரளக் கஞ்சாவையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு 07.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் அர்ஷத் பாடசாலைக்கு பின்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு 07.45 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 36 வயதுடைய 40 வீட்டுத் திட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 1000 மில்லிகிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், சம்மாந்துறைபொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான எம். நிரஞ்சன், ஜிஹான் உள்ளிட்ட குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply