சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறை இந்தியா விஜயம்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உத்தியோகபூர்வமான மூன்று நாள் விஜயத்தின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்திய அரசாங்கத்தின் பல உயர் மட்ட அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையில் சஜித் பிரேமதாச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply