பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தன்சானிய ஜனாதிபதி தேர்தல் முடிவு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக சமய்யா சுலுஹு ஹஸன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமய்யாவுக்கு ஆதரவாக 97 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இத்தனை வாக்கு சதவீதத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்று கருதப்படும் நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த 2021 இல் அப்போதைய ஜனாதிபதி ஜான் போம்பே மகுஃபுலி மரணமடைந்ததைத் தொடர்ந்து, உப ஜனாதிபதியாக இருந்த சமய்யா சுலுஹு ஹஸன் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இரு முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு அவர் தடை விதித்தார். இதன் காரணமாக அவரை எதிர்த்து மிகச் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 பேர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலை எதிர்த்து தொடர்ந்தும் நடந்துவரும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணையதளங்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply