நத்தாருக்கு முன் யுத்த நிறுத்தம் !

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அப்பேச்சுக்களை இடைநிறுத்தி கொண்டு இலங்கை விரையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வேண்டுதலின் பேரில் இலங்கை வரவிருக்கும் பிரணாப் முகர்ஜி இலங்கையில் யுத்தம் நிகழ்கின்ற வன்னிப் பிரதேசங்களுக்கு நேரடியாக செல்லவுள்ளகாகவும் அவர் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஓர் போர் நிறுத்தத்தை கொண்டுவர முயற்சிப்பார் எனவும் தெரியவருகின்றது. இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குடன் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் பேசிய போது இது விடயத்தில் தான் முயற்சி எடுப்பதாக உறுதியளித்துள்ள இந்தியப் பிரதமர் தேவையேற்படின் தான் நேரடியாகவே இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply