கிளிநொச்சி வெற்றி இராணுவத்திற்கு இழப்புகளுடன் பெற்ற வெற்றியாகவே அமையும்: இராமன்

வன்னியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்களில் விடுதலைப் புலிகள் தோல்வியுற்றால் அது விடுதலைப் போராட்டக் குழுவொன்று தோல்வியடைந்ததாகவே கருதப்படும் என இந்தியாவின் முன்னாள் ரோ செயலாளர் ராமன் தெரிவித்துள்ளார். 
 
விடுதலைப் புலிகளின் தோல்வி விடுதலைப் போராளிகளுக்குக் கிடைத்த தோல்வியாகவே பார்க்கப்படும், பயங்கரவாத அமைப்புக்குக் கிடைத்த தோல்வியாக அது பார்க்கப்படாது, மறுபக்கம் அரசாங்கப் படைகள் வெற்றிபெற்றால், பெரும் இழப்புக்களைச் சந்தித்துப் பெற்றி சிறிய வெற்றியாகவே கருதப்படும் என அவர் அவுட்லுக் இணையத்தளத்துக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் கிளிநொச்சியில் அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுஞ்சமரில் இரு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வழமையாக இரு தரப்புக்கிடையில் மோதல்கள் நடைபெற்றால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களைக் குறைத்து இரண்டு தரப்பும் கூறுவதே வழமை. எனினும், இராணுவத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கும் தகவல்களில் உண்மை இருக்கிறது” என ராமன் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இரண்டு தரப்புக்களும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது தெளிவாவதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இராமன், எனினும், விடுதலைப் புலிகளை விட இராணுவத்தினரே கூடுதலான உயிர் மற்றும் ஆயுதங்களை இழந்துள்ளனர் எனக் கூறினார். இந்த மோதல் தாம் இழந்த ஆயுதங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என முன்னாள் ரோ செயலாளர் கூறினார்.

எனினும், நிலமை விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே உள்ளது. நன்கு அனுபவம் மிக்க, பயிற்றப்பட்டவர்கள் போராடிவருகின்றனர். ஆயினும், அவர்களிடம் ஆயுதங்களே பற்றாக்குறையாக உள்ளது. இலங்கை விமானப்படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்படும்; வான் தாக்குதல்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என ராமன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை இராணுவம் படையினரின் எண்ணிக்கையையும், ஆயுதங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளதாகவும், சீனா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்திலிருந்து ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், விடுதலைப் புலிகளைப் போன்று, இராணுவத்தினர் தேர்ந்த பயிற்சிகளைப் பெற்றிருக்கவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply