மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபட முயற்சிக்கும் சகல நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள சில தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளில் ஈடுபட முயற்சிப் போரை தாமதமின்றி கைது செய்யுமாறு பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசிய நடவடிக்கைகள் அம்பலமானதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் சில புலி ஆதரவாளர்கள் இருப்பதாகவும் இவர்கள் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply