ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்!
ஓசாமா பின்லேடனும் அவரது நண்பன் அல் ஜாவாகிரியூம் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக நேட்டோ அதிகாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் தலிபான் ஆட்சி வீழ்ந்தது. அதன் பின் அந்த நாட்டில் ஒளிந்திருந்த தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்தனர். அல்-குவைதா பயங்கரவாத தலைவர் ஒசாமாவும் அவரது நண்பன் அய்மான் அல் ஜாவாகிரியூம் பாகிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சித்ரால் மலைப்பகுதியில் ஒளிந்திருப்பதாக ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தோரோ போரா மலைப் பகுதிகளிலோ மலை குகைகளிலோ தற்போது ஒசாமாவோ அவரது கூட்டாளி அல் ஜாவாகிரியோ ஒளிந்திருக்கவில்லை. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் சிலரது பாதுகாப்புடனும் சித்ரால் மலைப்பகுதியில் உள்ளூர் பழங்குடி மக்கள் ஒத்துழைப்புடனும் அவர்கள் பதுங்கியுள்ளனர் என்கிறார் நேட்டோ அதிகாரி.
தலிபான் தலைவர் முல்லா ஓமர் குவெட்டா நகருக்கும் கராச்சிக்கும் இடையே அடிக்கடி வந்து செல்கிறார். ஆனால் பாகிஸ்தான் வழக்கம் போல தங்கள் நாட்டில் அல்-குவைதா தலைவர்கள் இல்லை என கூறுகிறது என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply