தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்கக் கூடாது : ஆதாவுத செனவிரட்ன
தண்டனை அனுபவித்து வரும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது என நீதி அமைச்சர் ஆதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஸ்ட நீதவான்களுக்கான சம்பள உயர்வு குறித்த பாராளுமன்ற பிரேரணையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால் தண்டனை அனுபவித்து வரும் ஏனைய குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தை ஒர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நோக்கக் கூடாது எனவும், மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடிகள் தொடர்பில் முன்னரே தெரிந்திருந்தால் ஜனாதிபதி ஒருபோதும் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமித்திருக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட இராணுவத் தளபதிக்கு தண்டனை விதிப்பது எந்த வகையிலும் ஜனநயாக உரிமை மீறலாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply