600 காவல்துறை உத்தியோகத்தர் படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை : கருணா அம்மான்

1990ம் ஆண்டு மட்டக்களப்பில் 600 காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.கிழக்கில் யுத்தம் நடைபெற்ற குறித்த காலத்தில் தாம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
1990ம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றதாகவும், அந்தக் காலப்பகுதியில் தாம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்கும் தமக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிமளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் பொட்டு அம்மான், கரிகாலன் மற்றும் நியூட்டன் ஆகியோர் கிழக்கு பிராந்தியத்தை வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
30 ஆண்டுகளாக தொடர்ந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பேரவலங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே பொறுப்பேற்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த கால விடயங்களை கிளறுவதனை விடவும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply