முன்னாள் பெண் போராளிகள் 23 பேர் விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் 23 பேர் இன்று இன்று யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் வைத்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டியூ குணசேகர மற்றும் பிரதியமைச்சர் விஜயமுனி சொய்சா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகர, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை 11868 என்றும், அவர்களில் 90 சதவீதமானோர் சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

அவர்களில் தற்போதைக்கு 4460 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், விடுவிக்கப்பட்டவர்களில் 304 பெண்களும் உள்ளடங்குவதாவும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply