வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மீளவும் பெற்று கொடுத்தது ஐ. ம. சு. மு அரசே : சுசில் பிரேம் ஜெயந்த்
அரசியல் நோக்கங்களுக்காக ஐ. தே. க. வும் ஜே.வி.பி யும் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்தது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐ.ம.சு. முன்னணி அரசாங்கமே என ஐ.ம.சு.மு செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். ஐ.ம.சு.மு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
வட பகுதி மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அந்த மக்களின் உரிமை குறித்து ஜே. வி.பி குரல் கொடுத்து வருகிறது. அரசியல் இலாபத்திற்காக காலத்திற்கு காலம் ஜே.வி.பி தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி வருகிறது. அதன் தோல்விகளுக்கு இதுவே காரணம்.
கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களை அடைத்து வைத்திருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டினர். ஆனால் இன்று சுமார் 10 ஆயிரம் பேர் வரையே மீள்குடியேற்ற வேண்டி உள்ளது.
முல்லைத்தீவின் சில பகுதிகள் தவிர வடக்கின் சகல பகுதிகளிலும் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. சில பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றப்படுவதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.
ஐ. தே. க ஆட்சியில் அரச கட்டுப்பாட்டுப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று பிரிக்கப்பட்டு மக்களுக்கு அரச பகுதிகளுக்கு சென்று வாக்களிக்கும் நிலை காணப்பட்டது. புலிகளினாலும் ஏனையவர்களினாலும் பறிக்கப்பட்ட தமிழ் உரிமைகளை ஐ.ம. சு. மு. அரசாங்கமே மீளப் பெற்றுக்கொடுத்தது. தேர்தலுக்காகவோ வேறு நோக்கங்களுக்காகவோ நாம் அவர்களின் உரிமைகளை வழங்கவில்லை. கடந்தகால வரலாறுகளை ஐ.தே. க மறந்துள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply