கொழும்பில் சுற்றுலா வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
கொழும்பில் சுற்றுலா வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.டி.ஆர். விஜேவர்தன மாவத்தையின் சில பகுதிகளில் சுற்றுலா வலயம் அமைக்கப்பட உள்ளது.பதினைந்து ஏக்கர் பரப்பில் இந்த சுற்றுலா வலயம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த சுற்றுலா வலயத்தை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி கையொப்பமிடப்பட்ட அமைச்சரவையின் பத்திரத்தின் அடிப்படையில் குறித்த வலய காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேற்க உள்ளது. குறித்த பிரதேசத்தின் சில காணிப் பகுதிகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுவதாகவும், அவற்றை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்திற்கு சொந்தமான சில கட்டடங்கள் இவ்வாறு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply