அரசு – த. தே. கூ. பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என கனடா தெரிவித்துள்ளது. வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி, வடபகுதி அரசாங்க அதிபர்களைச் சந்தித்தபோது இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட கனேடிய உயர்ஸ்தானிகர், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான தேவைகள் குறித்துக் கலந்துரையாடியிருந்தார்.
வடபகுதிக்குச் சென்றிருந்த கனேடிய உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும், யாழ். பாதுகாப்புத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரையும்
சந்தித்திருந்தார்.
கனடாவிலுள்ள பெரும்பாலான புலம்பெயர் வாழ் தமிழர்களின் குடும்பத்தினர் வடபகுதியில் இருப்பதால், மீள்கட்டமைப்பு, புனரமைப்புப் பணிகளில் புலம்பெயர்ந்தவர் களின் தொடர்பு குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியிருந்தார்.
கனடாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு வாழ்வாதார செயற்பாடுகள் குறித்தும், அரச சார்பாற்ற நிறுவனங்களின் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர் தனது விஜயத்தின் போது முக்கியம் செலுத்தியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply