அரசாங்கம் பான் கீ மூனுடன் இரகசிய பேச்சுவார்த்தை

அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு பிரதிநிதிகளையும் இலங்கை இராஜதந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலத்தின் மூன்றாம் மாடியில் காணப்படும்  பொதுச் செயலாளர் பான் கீ மூனின் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே, பிரதிப் பிரதிநிதி சவேந்திரா சில்வா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தகவல்களை வெளியிடவில்லை. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு வருவாக இலங்கைப் பிரதிநிதிகள் சாட்சியமளித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் பற்றியும் அரசாங்கம் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply