உள்ளுராட்சி மட்டங்களில் அதிகாரங்களை பரவலாக்குவதற்கு அரசாங்கம் தயார்

அரசாங்கம் கிராம சபை, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை மட்டங்களில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கே தயாராக இருப்பதாகத் தெரிய வருகின்றது.  அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போதும் அரச தரப்பில் இருந்து மேற்குறித்த அதிகாரப் பரவலாக்கல் பற்றிய யோசனைகளே முன்வைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்களுக்கான உடனடித் தேவைகள் என்ன? அவைகளை இனங்கண்டு தெரிவித்தால் தீர்வு குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். யாழ்ப்பாணம் செல்வம் கொழிக்கும் பூமி. பிரிவினையை உருவாக்காதீர்கள் என்றும் கூட்டமைப்பினரிடம் அரச தரப்பினர் கேட்டுக் கொண்டனராம்.

அதேவேளையில், பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களைக் கூட அரச தரப்பினர் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை என்று கூட்டமைப்பினர் குறைபடுவதாகவும் அறிய முடிகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply