உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் ஹோஸ்னி முபாரக்
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று ‘தி கார்டியன்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு 7ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் (ரூபாயில் சுமார் 3.22 லட்சம் கோடி) சொத்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் முபாரக். அன்மையில் அந்த நாட்டில் நடந்த கிளர்ச்சியால் அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
இந்த நிலையில் லண்டனிலிருந்து வெளியாகும் ‘தி கார்டியன்” பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஹோஸ்னி முபாரக் இருக்கலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. ஹோஸ்னி முபாரக் இந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளிலோ அல்லது சொசுகு பங்களாக்கள், ஹோட்டல்களிலோ முதலீடு செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply