தபால் மூல வாக்களிப்பு நாளையும், மறுதினமும் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு:3,21,595 பேர் தகுதி
235 உள்ளூராட்சி சபைகளுக் கான தபால் மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதின மும் நடத்துவதற்கு சகல ஏற் பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாளை ஆரம்பமாகவிருக்கும் தபால் மூல வாக்களிப்பில் 3,21,595 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால்மூல வாக்களிப்பை சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் அதேசமயம், வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸாருக்கு மேலதிகமாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவு ள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.
வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்கு பவ்ரல் உட்பட இரண்டு சுதந்திரத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் சென்று வாக்களிப்பைக் கண்காணிக்க முடியும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வேட்பாளர்கள் தவிர்ந்த ஒரு கட்சிப் பிரதிநிதி வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்குச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மார்ச் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 34 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 600க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply