கனேடிய தமிழ் கணவர் “வெள்ளைவேனில்” மனைவியை கடத்திச் சென்று கொலை
நேற்று யாழில் தாய் மற்றும் 15வயது சிறுவன் ஒருவனையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்ற சம்பவம், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கடத்தி செல்லப்பட்ட 24 மணித்தியாலத்தினுள் யாழ். தலைமையத்தை சேர்ந்த படைவீரர்களால் சிறுவன் காப்பாற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரனைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் முயற்சியில் படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
கொலையாளியாக சந்தேகப்படும் கனடா பிரஜா உரிமைப்பெற்ற செல்வதுறை குகதாஸ் என்பவர் தனது 15வயது மகனை கடத்திச் செல்லும் நோக்குடனும், தனது மனைவியை கொலை செய்யும் நோக்குடனும், மார்ச் மாதம் 1ஆவது வாரம் இலங்கையை வந்தடைந்த்தாக தெரியவந்துள்ளது. இதை மேற்கொள்ள ஒரு சில நாட்கள் கொழும்பில் தங்கியிருந்து திட்டம் தீட்டிய இவர், இதை மூடி மறைக்க, அடிக்கடி மக்களால் பேசப்படும் “வெள்ளை வேன் ஆட் கடத்தல்”” சம்பவத்தை பயன்னடுத்தவும் திட்ட மிட்டுள்ளார்.
இதற்காக கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் “வெள்ளை டொல்பின் வேன்””(253-3852) ஒன்றை இவர் பெற்றுள்ளார், பின்பு வவுனியாவில் இருந்து இரண்டு உதவியாளர்களை பெற்றுக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமை(மார் 6) குகதாஸ் சாந்தினி(மனைவி) வயது 37, மற்றும் குகதாஸ் ரூபன்(மகன்) வயது 15, ஆகிய இருவரும் வசிக்கும் மீசாலையை வந்தடைந்துள்ளனர்.
இது வரை கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் செல்வதுறை வெளிநாட்டுக்கு சென்ற காலம் தொட்டு சாந்தினி அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இச் சந்தேக நபர்கள் மீசாலை கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, கொலை செய்யப்பட்ட சாந்தினியின் மாமாவின் வீட்டை வந்தடைந்து, பலாத்காரமாக சாந்தினியையும், அவரது மகனையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நிகழ்ந்து ஒரு சில நிமிடங்களில், விடுதலைப்புலி ஆதரவாளர்கள் “வெள்ளை வேனில் ஆட் கடத்தல்”” இடம்பெற்றுள்ளது என்று வதந்தியை பரப்பத் தொடங்கினர்.
இதையறிந்த யாழ் தலைமையக படையினரும், 52ஆவது புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
செல்வத்துறை கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, சாவகச்சேரி பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று,மகனை இருவர் வேனிள் வைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன், சாந்தினியை வேனை விட்டு வெளியே இழுத்துச் சென்று சைக்கிள் சைனால் சாகும் வரை அடித்துள்ளார்.
சாந்தினியை கொலைசெய்யும் வரை, ஏனைய இரு உதவியாளர்களும் ரூபனை மிரட்டி வைத்திருந்தனர். இக் கொலையாளிகள், பின்பு யாழ் கச்சேரி பகுதியில் ரூபனை விடுவித்துள்ளனர்.
செல்வதுறையை கைதுசெய்த பாதுகாப்பு படையினர், அடுத்த மணித்தியாலத்தில் 15 வயது சிறுவனை காப்பாற்றியதுடன், இவ் வேனின் சாரதி, ராஜா எனவும் அடையாளம் கண்டனர்.
தமது சொந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இராணுவத்தின் பெயரை பயன்படுத்தி “வெள்ளை வேனில் ஆட்கடத்தல்” என்ற ஒரு கற்பனை நாமத்தை சூட்டும் தந்துரோபாயத்தை சிலர் அடிக்கடி மேறகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply