வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு வீசா வழங்க மறுப்பு : ஜனாதிபதி
இலங்கையில் உள்ள மேற்குலக நாடுகளின் சில தூதரகங்கள், பொருளாதார நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு வீசா வழங்க மறுத்ததாகவும் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத சந்தேக நபர்களுக்கும் அவை வீசா அனுமதியை வழங்கியதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரான்சில் வெளிவரும் எஸ்ட்பிரண்டே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக செயற்பாடாத அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு நிதியுதவிகள் கிடைப்பதில்லை. இதனால் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அந்த அமைப்புகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம், சீனாவிடம் இருந்து மாத்திரமல்ல, இந்தியா, ரஷ்யா, உக்ரைன், ஹங்கேரி, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்தும் ஆயுதங்களை பெற்றுக் கொண்டதாகவும் அது இரகசியமான விடயம் அல்ல எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்டிக்கப்பட்ட பின்னர், பயங்கரவாத குழுவினர் பிரித்தானியாவுக்கும் கனடாவுக்கும் தப்பிச் சென்றதாகவும் மேற்குலக நாடுகள் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply