கடாபிக்கு ஏதாவது நடந்தால் சோமாலியாவைப் போல லிபியாவிலும் உள்நாட்டுப் போர் மூளும்

தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித தடைகளும் இன்றி பாதுகாப்பாக லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கடாபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.வில் கொண்டு வந்துள்ளன.

லிபியாவின் கிழக்குப் பகுதியில் கடாபியின் ஆதரவுப் படைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றமையால் ஜப்பானும் தன் நாட்டில் உள்ள கடாபியின் சொத்துக்களை முடக்கி லிபியா மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

கடாபி மகன்களில் ஒருவரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான சாடி கடாபி அல் அராபியா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ‘கடாபிக்கு ஏதாவது நடந்தால் சோமாலியாவைப் போல லிபியாவிலும் உள்நாட்டுப் போர் மூளும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply