அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றது : ரணில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள நான்கு பௌத்த பீடங்களின் தலைவர்கள் கூறும் அறிவுரை இந்த அரசாங்கம் கேட்பதில்லை. நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்ற போவதாக அரசாங்கம் உறுதியளிதிருந்த போதிலும், அபிவிருத்தி என்பது விளம்பர பலகைகளுக்குள் மாத்திரமே அடங்கியுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க – சீதுவ பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போடடியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கை வைக்கும் சகல இடங்களிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.ஒழுங்கான திட்டத்தின் அடிப்படையில் பணியாற்ற அரசாங்கம் தவறியுள்ளது. மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்கி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையுமாறும ணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி முழு நாடும் உள்ளடங்கும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை  மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களே தற்போதும் காணப்படுகிறது. இதில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் பிரதானமானது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை மறந்துள்ளது. மக்கள் தற்போது மிகவும் கஷ்டமான நிலையில்ப் வாழ்ந்து வருகின்றனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply