யாழில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம்
யாழ். உடுவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனம்தெரியாத ஆயுததாரி குழுவினர் வீட்டினில் இருந்த பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு பெண்ணின் தாலியை அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்று இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்தில் பெண்ணின் தாலி மட்டுமல்லாது வீட்டில் இருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களையும் அக்குழுவினர் திருடிச் சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த பெண் ( கிருஷ்ணப்பிள்ளை மகேஸ்வரி ) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply