எதிர்க்கட்சிகள் வெளிநாட்டில் அரசியல் நடத்தி வருகின்றன : ஜனாதிபதி
எதிர்க்கட்சிகள் வெளிநாட்டில் அரசியல் நடத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தாம் உள்நாட்டில் அரசியல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், பிரதான எதிர்க்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வெளிநாடுகளுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதே தமது பிரதான இலக்கு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வலுவான ஓர் எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை மனித உரிமைகளுக்காக தாம் வெளிநாடுகளில் குரல் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் மக்கள் இணைந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply